கனடாவில் மாணவியுடன் ஒரே ஹொட்டல் அறையில் தங்கிய ஆசிரியை பணி நீக்கம்!

Report Print Balamanuvelan in கனடா

மாணவி ஒருவருடன், பாலியல் உறவு உட்பட, தனிப்பட்ட முறையில் முறைதவறிய உறவு வைத்திருந்த ஆசிரியை ஒருவரின் ஆசிரியர் உரிமத்தை ஒன்ராரியோவின் ஆசிரியர்களுக்கான ஆளுமை அமைப்பு பறித்துள்ளது.

Sheryl Anna Jean Fontaine என்னும் ஆசிரியை, தனது மாணவி ஒருவரின் குடும்பத்துடன் பள்ளியுடன் தொடர்பில்லாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

பின்னர் அனைவரும் ஹொட்டல் ஒன்றில் தங்க, அந்த மாணவியின் பெற்றோர் ஒரு அறையிலும், அந்த மாணவியும் Sherylம் ஒரு அறையிலும் தங்கியுள்ளார்கள்.

அப்போது மாணவியுடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்துகொண்ட Sheryl, அவரை பாலியல் ரீதியில் அணுகியிருக்கிறார்.

அவர்களுக்குள் பாலியல் ரீதியிலான முறைதவறிய உறவு நடந்ததாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாணவிக்கு மதுபானம் கொடுத்துள்ள Sheryl, பள்ளி நேரங்களில் மதிய உணவு இடைவேளையை தன்னுடன் செலவிடுமாறு உற்சாகப்படுத்தியுள்ளார்.

அத்துடன் இருவருக்கும் இடையில் குறுஞ்செய்திப் பரிமாற்றமும் நிகழ்ந்துள்ளது.

எனவே தனது கடமைகளை மிக மோசமான முறையில் மீறியதாக Sheryl மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பணியில் நன்னடத்தை தவறுதல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மாணவி ஒருவரை மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்தது என மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகளையடுத்து Sherylஇன் ஆசிரியர் உரிமம் பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்