நீ உன் நாட்டுக்கே போ! கனடாவில் குடும்பத்தினர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய பெண்ணின் வீடியோ

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பெண்ணொருவர் ஒரு குடும்பத்தினர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டீஷ் கொலம்பியாவில் அமைந்துள்ளது Richlea Square Shopping Centre. இதன் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று முன் தினம் பகலில் இரண்டு கார்கள் ஒரே நேரத்தில் வந்து நிறுத்தப்பட்டன.

அப்போது ஒரு கார் அங்குள்ள வெள்ளை நிற கோட்டை தாண்டி நின்றது, போக்குவரத்து விதிப்படி அதை கார் தாண்டக்கூடாது.

இதையடுத்து இன்னொரு காரில் இருந்த எமி ஜூ என சீனப்பெண் அந்த காரில் இருந்து இறங்கிய பெண்ணிடம், உங்கள் கார் வெள்ளை நிற கோட்டை தாண்டியுள்ளது என கூறினார்.

இதை தொடர்ந்து கோபமான இன்னொரு பெண், உனக்கு ஒன்றும் தெரியாது, நீ சீனாவுக்கே திரும்ப போ! உன் ஊரு அது தான் என கூறினார்.

பின்னர் மிக மோசமான வார்த்தைகளால் அவர் திட்ட தொடங்கினார். இதையெல்லாம் பாதிக்கப்பட்ட எமி தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார்.

எமி கூறுகையில், என் தாயை மருத்துவரிடம் காட்டவும் மற்றும் என் குழந்தையோடு ஷாப்பிங் செய்யவும் அங்கு வந்தேன்.

அந்த பெண் இனவெறியை தூண்டும் விதத்தில் பேசியதை பார்த்து என் மகளுக்கு பயம் வந்துவிட்டது.

எங்களை திட்டிய பெண்ணை பதிலுக்கு பேசுவதை விட என் குழந்தையை சமாதானம் செய்வதே முக்கியம் என நினைத்தேன்.

சம்பவத்துக்கு பின்னர் என் கணவர் பங்க் ஜூவுடன் காவல் நிலையத்துக்கு சென்று இது குறித்து புகார் கொடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்