இறப்பதற்கு முன் மகன் பதிவு செய்த வீடியோவை பார்க்கவேண்டும்: கனடாவை உலுக்கிய கொலையாளியின் தந்தை!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவை உலுக்கிய சீரியல் கில்லர்களில் ஒருவரின் தந்தை, தனது மகன் இறக்கும் முன் பதிவு செய்த வீடியோவை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியர் ஒருவர், அவரது அமெரிக்கக் காதலி மற்றும் கனேடிய பேராசிரியர் ஒருவர் என மூன்று பேரை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்தவர்களாகிய Bryer Schmegelsky மற்றும் Kam McLeod என்னும் இருவரின் உடல்கள் கனடாவில் நெல்சன் நதிக்கருகே கண்டெடுக்கப்பட்டன.

அவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக உடற்கூறு அறிக்கை கூறியது.

இந்நிலையில், அந்த உடல்களுக்கருகிலிருந்து மொபைல் போன் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்த பொலிசார், அதில் இறந்த இருவரும் தங்கள் கடைசி ஆசை உட்பட சில விடயங்களை பதிவு செய்திருந்ததாக தெரிவித்தனர்.

அவர்களில் Bryer குறித்த தகவல்கள், அவரது தாயாரிடம் அளிக்கப்பட்டுவிட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது Bryerஇன் தந்தை தனது மகன் இறப்பதற்கு முன் பதிவு செய்த வீடியோ தனக்கு வேண்டும் என கேட்டுள்ளார்.

அதிலுள்ள தகவல்கள் சில வாரங்களில் வெளியிடப்படும் என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் அந்த வீடியோவைக் கைப்பற்றும் முயற்சியில் Bryerஇன் தந்தையான Alan Schmegelskyயின் வழக்கறிஞர் இறங்கியுள்ளார்.

Sarah Leamon என்னும் அந்த வழக்கறிஞர், கனேடிய பொலிசாருடன் தான் அந்த வீடியோவை வாங்குவதற்காக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்