தாமதமாக வந்த ஆம்புலன்ஸால் துணைவரை இழந்த பெண்: இனி யாருக்கும் இதுபோல் நடக்க விடமாட்டேன் என்கிறார்!

Report Print Balamanuvelan in கனடா

Karla Dehmelம் அவரது கணவர் David Benedictம் நோவா ஸ்கோஷியாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஒன்றிற்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.

பயங்கரமாக தலைவலிப்பதாக கூறியிருந்த David, திடீரென பேசும்போது அவரது வாய் குளறுவதைக் கேட்டு, ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்த Karla, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு ஒரு ஸ்கேன் தேவைப்படுவதோடு, தண்டுவடத்திலிருந்து நீர் எடுத்து சோதனை செய்ய வேண்டும் என்றும், அதற்கான வசதிகள் அந்த மருத்துவமனையில் இல்லாததால் 35 நிமிட பயணத்திற்கப்பால் உள்ள Kentvilleக்கு Davidஐக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இரவு 11 மணியளவில் ஆம்புலன்ஸ் வரும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், திடீரென ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அதிகாலை 2 மணிக்குதான் ஆம்புலன்ஸ் வரும் என்றும் Karlaவுக்கு கூறப்பட்டுள்ளது.

சரி அதற்குள் வீட்டுக்குச் சென்று சில துணிமணிகளை எடுத்து வந்துவிடலாம் என்று, கணவரிடம் கூறிவிட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார் Karla.

சுமார் 12.45 மணியளவில் மருத்துவமனைக்கு வந்த Karla, தனது கணவரின் கால்கள் கட்டிலுக்கு வெளியே தொங்கிக் கிடக்க அவரை சரியாக படுக்க வைக்க நர்ஸ்கள் முயற்சி செய்து கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார்.

அவரை அருகில் சென்று பார்த்தபோது, அவர் சுயநினைவுடன் இல்லை, அவர் கண்களில் டார்ச் அடிக்கும்போது, அவரது கண்கள் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை, அவரது மார்பைத் தேய்த்துவிடும்போது அவர் நகரவில்லை என அனைத்தையும் கவனித்திருக்கிறார் Karla.

2 மணிக்கு வர வேண்டிய ஆம்புலன்ஸ் அப்போதும் வராதநிலையில், தனது கணவரின் உடல்நிலை மோசமடைவதைக் கவனித்தபோது, 15 ஆண்டுகால தாம்பத்ய வாழ்வில் தன் கணவரை நன்கு அறிந்து வைத்திருந்த Karla, மருத்துவரிடம் தனது கணவருக்கு தனிமையிலிருப்பதற்கான சில வசதிகளை கோரியதோடு, உறவினர்களையும் அழைத்திருக்கிறார்.

பின்னர் சற்று நேரத்திற்குப்பின் அன்று காலை, அதே மருத்துவமனையிலேயே தனது 54ஆவது வயதில் மரணமடைந்திருக்கிறார் David.

நோவா ஷ்கோஷியாவில் ஆம்புலன்ஸ் பிரச்சினை நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கிறது.

சரியான நேரத்திற்கு ஆம்புலன்ஸ் வந்திருந்தால் தனது கணவர் இறந்திருக்க மாட்டார் என்ற எண்ணம் தனக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் Karla, மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்கிறார்.

விடயங்கள் மாறவேண்டும், துரதிர்ஷ்டவசமாக David இறந்துபோனார் என்று கூறும் Karla, இனியும் இதுபோல் யாருக்கும் நடக்ககூடாது என்று விரும்புகிறேன் என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்