கனேடிய விமானத்தில் எதிர்பாராத கோளாறு: பயணிகளை 11 நாட்கள் காத்திருக்க கோரிய விமான நிறுவனம்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான விமானம் ஒன்றில் எதிர்பாராத கோளாறு ஏற்பட்டதையடுத்து அது ரத்து செய்யப்பட்டது.

சரி, அடுத்த விமானம் சில மணி நேரங்களில் ஏற்பாடு செய்யப்படும் என பயணிகள் எதிர்பார்த்திருக்க, அவர்களது மொபைலில் ஒரு செய்தி வந்தது.

அது என்னவென்றால், விமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள சிலரது விமானம், ஏழு நாட்களில் புறப்படும் என்றும் சிலரது விமானம் ஒன்பது நாட்களில் புறப்படும் என்றும், அதிகபட்சமாக சிலர் 11 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இத்தனைக்கும் அது உள்ளூர் விமானம்தான், Kelownaவிலிருந்து Winnipegகு செல்லும் Swoop என்னும் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் அது.

சுமார் 21 மணி நேர பயணத்திற்காக 11 நாட்கள் காத்திருக்க வேண்டும் என விமான நிறுவனம் கூறியதைக் கேட்ட பயணிகள் கடும் எரிச்சல் அடைந்தனர்.

சிலர் விமான நிறுவன ஊழியர்களிடம் விவாதம் செய்தனர். பலன்? இரண்டு மணி நேர விவாதத்திற்குப்பின், விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியது, அவ்வளவுதான், அதுவும் மொபைலில், உண்மையாகவே வருந்துகிறோம்’ என்ற குறுஞ்செய்திதான் வந்தது!

இனி ஜென்மத்திற்கும் Swoop விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் ஏறவேமாட்டேன் என்கிறார் Rae என்னும் பயணி.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்