இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக கனடாவில் ஒரு பிரார்த்தனை: மொழி மத வேறுபாடின்றி கலந்து கொண்ட மக்கள்!

Report Print Balamanuvelan in கனடா

சில மாதங்களுக்கு முன்புதான் இலங்கையில் தேவாலயங்களிலும் ஹொட்டல்களிலும் குண்டுகள் வெடித்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததோடு, ஏராளமானோர் மோசமாக காயமடைந்தார்கள்.

இலங்கையில் தங்கள் ஜனம் பாதிக்கப்பட்டபோது வான்கூவரில் பதறித்துடித்த அதே கனேடிய இலங்கையர்கள், வேறுபட்ட மத நம்பிக்கை கொண்டவர்கள், தற்போது பாதிக்கப்பட்டோருக்காக பிரார்த்தனை செய்ய ஒன்றுகூடிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இலங்கையிலிருந்து 2007ஆம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்த Peter Gomes, தங்கள் ஆலயத்தில் தங்கள் நாட்டில் அமைதி நிலவ வேண்டி பிரார்த்தனை செய்வதற்காக மத வேறுபாடின்றி இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அவரது அழைப்பை ஏற்று அந்த பிரார்த்தனையில் கலந்து கொண்ட சுமார் 300 பேரில், ஐந்தில் ஒரு பங்கு இந்துக்கள் மற்றும் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள்.

அந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான புத்த மதத்தைச் சேர்ந்தவரான Eraj Liyamage, 25 ஆண்டுகளுக்குமுன் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயந்தவர்.

திரு Gomes அவர்கள் வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்ட மக்களை இப்படி ஒரு கூடுகைக்கு ஏற்பாடு செய்ததற்காக அவரை பாராட்டுகிறேன் என்று கூறிய Liyamage, நம்பிக்கைகளில்தான் வேறுபாடுகள், ஆனால் மக்கள் எல்லோரும் ஒரேபோல்தான் என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்