இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்ற வயதான பெண் மீது கார் வேகமாக மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Winnipeg நகரை சேர்ந்த 71 வயதான பெண் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சாலையில் சென்ற போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.

இதையடுத்து அவசர உதவி குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்தின் தொடர்புடைய காரின் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி செல்லவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாராவது இருந்தால் தங்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்