கண் விழித்தபோது படுக்கையில் தன் அருகே அமர்ந்திருந்த நபரைக்கண்டு அதிர்ந்த பெண்: பின்னர் நடந்தவை!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் ஒரு பெண் காலையில் கண் விழித்தபோது தனது படுக்கையில் தன்னருகே ஒரு ஆண் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அந்த நபர் தன்னிடம் ‘ஐ லவ் யூ’, இன்றைய தினம் உனக்கு இனிமையாக இருக்கட்டும் என்று கூறியபோது, பயந்து போனார் அவர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் Laura Faganello (23). அவரிடம், ஐ லவ் யூ சொன்ன அந்த நபர் வேறு யாருமில்லை, அவரது கணவரான Braydenதான்.

என்ன நடந்தது என்றால், இரண்டு ஆண்டுகளுக்குமுன் அலுவலகத்திலிருக்கும்போது Lauraவின் தலையில் ஒரு தூண் விழுந்து விட்டது.

அந்த விபத்தின் காரணமாக அவரது மூளையில் ஏற்பட்ட பாதிப்பினால் அவர் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்.

தனக்கு ஒன்பது மாதங்களுக்குமுன் திருமணம் நடந்ததையும், முக்கியமாக தனது கணவர் Braydenஐயும் முற்றிலுமாக மறந்துவிட்டார் அவர். Braydenஐ அது மிக அதிகமாக பாதித்தது.

தனது காதல் மனைவி தன்னைப் பார்த்து பயப்படுவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

image: CTV Vancouver Island

கணவனும் மனைவியும் வெறும் ரூம் மேட்களாக மட்டுமே வாழ்ந்து வந்தனர். என்றாலும் அந்த இரண்டாண்டு காலத்தில் Brayden, Laura மீது அன்பைப் பொழிந்தார். அவ்வப்போது காதல் குறிப்புகளை எழுதி வைத்து விட்டு Lauraவின் முடிவுக்காக காத்திருப்பார். அவரது அன்புக்கும் பொறுமைக்கும் பலன் கிடைத்தது.

ஒரு நாள் அவரிடம் சென்ற Laura, எனக்கு நினைவில்லாத ஒரு திருமணத்தில் நான் இருக்க விரும்பவில்லை, அதே நேரத்தில் உங்களை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

எனவே என்னுடன் ஒரு நாள் டேட்டிங் வர முடியுமா என்று Laura கேட்க, மீண்டும் அவரும் Braydenம் டேட்டிங் சென்றிருக்கிறார்கள்.

ஆகத்து மாதம் 19ஆம் திகதி மீண்டும் Lauraவிடம் புரபோஸ் செய்தார் Brayden. தங்கள் நான்காவது திருமண நினைவு நாள் அன்று, அடுத்த கோடை விடுமுறையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் Lauraவும் Braydenம், சுப முடிவுதான்!

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்