கனடாவில் மாயமான 13 வயது சிறுமி: புகைப்படத்துடன் வெளியான தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவின் டொரண்டோவில் காணாமல் போன சிறுமி ஒருவர் குறித்து தகவல் கிடைத்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டொரண்டோ பொலிசார் தங்கள் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், Javaiah Walters என்ற 13 வயது சிறுமியை காணவில்லை.

அவரை கடைசியாக 30ஆம் திகதி ஐந்து மணியளவில் Jane St & Exbury சாலை அருகில் காணப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுமியின் உயரம் 4 அடி 11 அங்குலம் எனவும், சாதாரண உடல்வாகுடன் நிளமான கருப்பு நிற தலைமுடியுடன் சிறுமி இருப்பார் என கூறப்பட்டுள்ளது.

சிறுமி Javaiah காணாமல் போன அன்று கருப்பு, வெள்ளை நிறத்தில் மேல் உடையும், கருப்பு ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார் என புகைப்படத்துடன் டுவிட்டரில் பொலிசார் பதிவிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers