கனடா லொட்டரியில் $50 மில்லியன் பம்பர் பரிசு விழுந்துள்ள நிலையில், அந்த டிக்கெட் Calgary நகரில் விற்பனையாகியுள்ளது தெரியவந்துள்ளது.
Western Canada Lottery Corporation வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 30ல் நடத்தப்பட்ட லொட்டரி குலுக்கலில் $50 மில்லியன் ஜாக்பாட் பரிசு விழுந்த லொட்டரி சீட்டானது Calgary நகரில் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசு சீட்டை வாங்கியவர்கள் பரிசை பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி Calgary நகரில் பம்பர் பரிசு விழுந்த லொட்டரி டிக்கெட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலி விரைவில் கோடீஸ்வரர் ஆகவுள்ளார் என தெரியவந்துள்ளது.