சிறுநீர் கழிக்க சென்ற இளம்பெண், கழிவறைக்குள் நுழைந்த ஆண் பாதுகாவலர்: பின்னர் நடந்த அத்துமீறல்!

Report Print Balamanuvelan in கனடா

வின்னிபெக்கை சேர்ந்த பெண்ணிடம் பொதுக்கழிவறை, பாதுகாவலர் மோசமாக நடந்து கொண்டது குறித்து அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வின்னிபெக்கைச் சேர்ந்த Hayley Rogersக்கு பொதுக்கழிவறையை பயன்படுத்தவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஒரு ஆண் பாதுகாவலர் அவர்களைப் பின் தொடர்ந்துள்ளார். அவர் கழிவறைக்குள் சென்று கதவை அடைத்து சிறுநீர் கழிக்க முயலும்போது, படபடவென கதவைத் தட்டிய அந்த பாதுகாவலர், ஏய், நீ ஆணா பெண்ணா என்று கத்தியிருக்கிறார்.

திடுக்கிட்ட Hayley அந்த பாதுகாவலர் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதே கழிவறையின் முன் நிற்பதையும் அவரது கால்கள் கதவுக்கு கீழே தெரிவதையும் கண்டு நிமிர்ந்து பார்க்கும்போது, அந்த நபர் கழிவறைக்குள் எட்டிப் பார்த்திருக்கிறார்.

பதறி எழுந்து உடையை சரி செய்து கொண்டு, கதவைத் திறந்து, தான் பெண்தான் என கூறியபிறகு, அங்கிருந்து சென்றிருக்கிறார் அந்த பாதுகாவலர்.

பின்னர் நடந்ததைக் குறித்து அந்த அலுவலக மேலாளரிடம் Hayley புகாரளிக்க, மன்னிப்புக் கோரியுள்ளார் அவர்.

அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறும்போது, வாசலில் நின்ற அந்த பாதுகாவலர் மீண்டும் Hayleyயை தோளில் தட்டி, மன்னிக்க வேண்டும் நீங்கள் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை என்று மீண்டும் கூற, மீண்டும் சென்று மேலாளரிடம் அதையும் கூறியுள்ளார் Hayley.

மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தங்கள் பணியாளர்களுக்கு நிறுவனங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிறார் Hayley.

தான் ஒரு கருப்பினப்பெண், மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறும் Hayley, தனது நிறம் கூட, தான் கௌரவக் குறைவாக நடத்தப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என கருதுகிறார்.

அந்த கழிவறைக்குள் நிமிர்ந்து பார்த்தபோது பார்த்த அந்த ஆணின் கண்கள் இன்னமும் தன்னை தொந்தரவு செய்வதாகவும், வெளியிடங்களுக்கு செல்லும்போது கழிவறைக்கு செல்ல தான் அஞ்சுவதாகவும் தெரிவிக்கும் Hayley, தனக்கு நிச்சயம் மன நல ஆலோசனை தேவைப்படுகிறது என்கிறார்.

இதில் இன்னொரு விடயமும் உள்ளது, Hayley ஆண்கள் போல் முடிவெட்டிக் கொண்டிருக்கிறார், மேலும் தான் பெண்கள் போல் உடையணியவும் இல்லை என்கிறார்.

அதனாலேயே கழிவறைக்கு செல்லும்போது தனது உறவினரான ஒரு பெண்ணையும் உடன் அழைத்துச் சென்றதாகவும், அவரை வாசலில் நிறுத்திவிட்டுத்தான், தான் கழிவறைக்கு சென்றதாகவும், இருந்தும் தனது பிரைவசியும் கண்ணியமும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார் Hayley.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்