ஜேர்மானிய கணவரை விவாகரத்து செய்த மனைவி: குழந்தைகளை கனேடிய மனைவியிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

Report Print Balamanuvelan in கனடா

ஜேர்மன் குடிமகனான கணவர், கனேடிய குடிமகளான மனைவி, நான்கு குழந்தைகள்... கணவனும் மனைவியும் பிரிய, குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார் கணவர்.

நீதிமன்றமோ மனைவியிடம் குழந்தைகளை ஒப்படைத்துள்ளது. இந்த சுவாரஸ்ய வழக்கு நடந்தது கனடாவின் ஒன்ராறியோவில்.

Nils Ludwig ஒரு ஜேர்மன் குடிமகன், அவர் கனேடிய குடிமகளான Jennifer Ludwigஐ 2001இல் மணந்து கொண்டார்.

2017இல் அனைத்து உடைமைகளுடனும், தம்பதி கனடாவுக்கு குடிபெயர்ந்தார்கள். ஆனால் கடந்த ஆண்டு தம்பதியர் பிரிந்தார்கள். Nils Ludwig ஐரோப்பாவுக்கு திரும்ப திட்டமிட்டார்.

ஆனால் தான் கனடாவில் வாழ விரும்புவதாக தெரிவித்த Jennifer, விவாகரத்து கோரியதோடு, குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்கக் கோரினார்.

Nils Ludwig, குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று Hague Conventionஇன் அடிப்படையில் நீதிமன்றத்தைக் கோரினார்.

குழந்தைகளில் மூன்று பேர் கனடாவில் வாழ விரும்பினார்கள், ஒரு குழந்தை எப்படி என்றாலும் பரவாயில்லை என்றது.

ஜனவரி மாதம், உச்சநீதிமன்ற நீதிபதியான Denise Korpan, ’habitually resident’ என்ற ஒரு விதியைப் பின்பற்றி, அதாவது குழந்தைகள் கனடாவில்தான் வாழ்ந்து வருகிறார்கள், அதனால் அவர்களை Jenniferஇடம்தான் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் Nils Ludwig.

மேல்முறையீட்டு நீதிமன்றம் நீதிபதி Denise Korpan அவர்கள் சரியாகத்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள், அதாவது new hybrid model என்னும் முறையைப் பின்பற்றித்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்று கூறி, குழந்தைகள் தாயுடன்தான் இருக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்