இரவு நேரத்தில் சாலையில் நடந்த சென்ற பெண் மீது மோதிய கார்.. புகைப்படத்துடன் வெளியான பின்னணி தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் மீது மோதிய கார் பின்னர் அங்கிருந்த வீட்டுக்குள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

டொரண்டோவில் உள்ள Lansdowne Avenue மற்றும் Wallace Avenueவின் உள்ள Bloor தெருவின் வடக்கு பக்கத்தில் தான் இச்சம்பவம் செவ்வாய்கிழமை இரவு நடந்துள்ளது.

பொலிசார் கூறுகையில், காரானது சாலையில் நடந்து சென்ற 20களில் உள்ள பெண் மீது மோதியதோடு அங்குள்ள வீட்டின் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் உயிருக்கு ஆபத்தில்லை.

காரை மோதிய ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே தான் இருந்தார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்