மகன் தற்கொலை செய்துகொள்வதற்குமுன் பதிவு செய்த வீடியோ: தந்தையை பார்க்க அனுமதித்த பொலிசார்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவை உலுக்கிய மூன்று பேர் கொலையில் குற்றவாளிகளில் ஒருவரின் தந்தை, தனது மகன் தற்கொலை செய்துகொள்வதற்குமுன் பதிவு செய்த வீடியோவை தன்னை பார்க்க அனுமதிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.

Leonard Dyck, Chynna Deese மற்றும் Lucas Fowler என்னும் மூவரைக் கொலை செய்தவர்களில் ஒருவரான Bryer Schmegelskyயின் தந்தையான Al Schmegelsky, தனது மகன் தற்கொலை செய்வதற்கு முன் பதிவு செய்த கடைசி வீடியோவை பார்க்க வேண்டும் என்று கனேடிய பொலிசாரை கேட்டுக்கொண்டிருந்தார்.

அதாவது குற்றவாளிகளான Kam McLeod மற்றும் Bryer Schmegelsky, இருவரும் தாங்கள் பொலிசாரால் தேடப்படுவதை அறிந்து தங்களைத் தாங்களே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிறது.

அப்படி தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அவர்கள் இருவரும் தங்கள் மொபைல் போனில் சில விடயங்களை வீடியோவாக பதிவு செய்திருந்தனர்.

அவர்களது உடலை பொலிசார் கைப்பற்றும்போது, அந்த மொபைல் போனையும் பொலிசார் கைப்பற்றினர் பின்னர், அந்த வீடியோவில், தாங்கள் இறந்தபின், தங்கள் உடல்களை என்ன செய்யவேண்டும் என அவர்கள் இருவரும் பேசியிருந்த 30 நிமிட காட்சி மட்டும் இருவரின் குடும்பத்தினருக்கும் காட்டப்பட்டது.

இருந்தும் ஒரு தந்தையாக முழு வீடியோவையும் தான் பார்க்கவேண்டும் என Bryerஇன் தந்தை வற்புறுத்தி வந்தார்.

ஆனால் அந்த வீடியோவிலுள்ள விடயங்கள், வழக்குக்கு அவசியம் என்பதால், அவற்றை வெளியிடுவது வழக்கை பாதிக்கலாம் என்று எண்ணிய பொலிசார், அதை வெளியிட மறுத்துவந்தார்கள்.

இந்நிலையில் Bryerஇன் தந்தை தொடர்ந்து வற்புறுத்தவே, கனேடிய பொலிசாரும் அவரும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளார்கள்.

அந்த வீடியோ அவருக்கு காட்டப்படும், ஆனால் அதிலுள்ள விடயங்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது என்ற ஒப்பந்தத்தின் பேரில் அவருக்கு அந்த வீடியோ தற்போது காட்டப்பட்டுள்ளது.

Bryerஇன் தந்தையும் அவரது சட்டத்தரணியும் வீடியோ காட்டப்படும்போது உடன் இருந்துள்ளனர்.

நேற்று காலை அந்த வீடியோவை இருவரும் பார்த்தநிலையில், அது எல்லோரையும் உணர்ச்சி வசப்படுத்தக்கூடியதாக இருந்தது, அதைப் பார்ப்பது எளிதல்ல என்று தெரிவித்துள்ளார் அவர்களது சட்டத்தரணியான Sarah Leamon.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers