தண்ணீருக்குள் சிறுவன் எடுத்த புகைப்படம்: 27 ஆண்டு கால வழக்குக்கு உதவிய அதிசயம்!

Report Print Balamanuvelan in கனடா

சிறுவன் ஒருவன் தண்ணீருக்குள் புகைப்படம் எடுக்கும் கமெரா ஒன்றின் உதவியால் எடுத்த புகைப்படம் ஒன்று, 27 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த ஒரு வழக்கை தீர்க்க உதவியுள்ளது.

Max Werenka (13) என்ற சிறுவன் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Griffin ஏரியில் படகு பயணம் மேற்கொண்டுள்ளான்.

அப்போது தண்ணீருக்கடியில் ஒரு கார் மூழ்கிக் கிடப்பதை தனது கமெரா உதவியால் படம் பிடித்திருக்கிறான்.

அவனது இந்த செயல், 27 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த ஒரு வழக்கை தீர்க்க உதவப்போகிறது என்பது அவனுக்கு தெரியாது.

உடனடியாக அவன் பொலிசாருக்கு தகவல் கொடுக்க, அங்கு வந்த பொலிசாரின் கண்களில் கார் சிக்கவில்லை.

உடனே தண்ணீருக்குள் குதித்த Max, தண்ணீருக்குள் புகைப்படம் எடுக்கும் தனது கமெராவால் அந்த காரை புகைப்படம் எடுத்து கரைக்கு வந்து பொலிசாரிடம் காட்டியிருக்கிறான்.

உடனே பொலிசார் ஆழ்கடல் நீச்சல் வீரர்களை ஏற்பாடு செய்ய, இறுதியாக கருப்பு நிற ஹோண்டா அக்கார்டு கார் ஒன்றை தண்ணீருக்குள்ளிருந்து மீட்டிருக்கிறார்கள் அவர்கள். காருக்குள் ஒரு பெண்ணின் உடல் இருந்திருக்கிறது.

இதற்கிடையில், 1992ஆம் ஆண்டு, Janet Farris என்ற 70 வயது பெண்மணி ஆல்பர்ட்டாவில் நடக்கும் திருமணம் ஒன்றிற்காக காரில் சென்றிருக்கிறார். பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை.

அவரது மகனான ஜார்ஜ் பொலிசாரிடம் புகாரளிக்க, எவ்வளவோ தேடியும் Janetஐயோ அவரது காரையோ கண்டுபிடிக்க முடியவில்லை.

அன்று காருடன் காணாமல் போன Janetதான் தற்போது கிடைத்துள்ள காருக்குள் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Janetஇன் மகனான ஜார்ஜ் (62), தன் தாய் இறந்து போனது வருத்தத்திற்குரிய விடயம்தான் என்றாலும், அவர் என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்ததற்கு, அவரது உடலாவது கிடைத்துள்ளது ஆறுதலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தன்னையறியாமல் தூங்கியதாலோ அல்லது, எதிரே வந்த வாகனம் அல்லது விலங்கின்மீது மோதாமல் தவிர்ப்பதற்காகவோ காரை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையிலிருந்து வழி விலகி ஏரிக்குள் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று எண்ணுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் Maxஇன் தாயாகிய Nancy Werenka, தனது மகனால் பெருமையடைவதாக தெரிவித்துள்ளார்.

ஒருவர் 26 ஆண்டுகளாக என்ன ஆனார் என்பது தெரியாமல் அவரது குடும்பம் எவ்வளவு தவித்திருக்கும் என்கிறார் அவர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்