கனடாவில் வீட்டில் சடலமாக கிடந்த 40 வயது பெண்... அவரின் புகைப்படம் வெளியானது

Report Print Raju Raju in கனடா

கனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு தினங்களுக்கு முன்னர் கொலையாளி பொலிசில் சிக்கியுள்ளார்.

டொரண்டோவின் Scarborough பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண்ணொருவர் இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சடலமாக கிடந்த Choiu-Shuang Cheng (40) என்ற பெண்ணின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளி சிக்காமல் இருந்தான்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மன்சூர் ஜலாலி (53) என்பவரை பொலிசார் இந்த வழக்கில் கைது செய்துள்ளனர்.

அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது, இதையடுத்து நேற்று நீதிமன்றத்தில் ஜலாலியை ஆஜர்படுத்திய பொலிசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்