நண்பர் அளித்த விருந்தில் சிப்பி உணவைக் கடித்த நபருக்கு சிக்கிய ஆச்சரியம்!

Report Print Balamanuvelan in கனடா

உணவுக்காக சிப்பிகள் வளர்த்து விற்கும் ஒருவர், தனது நண்பர்களுக்கு விருந்தளிக்கும்போது உணவில் வறுத்த சிப்பிகளை பரிமாறியுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியாவில் நடந்த அந்த விருந்தில் பங்கேற்ற Eric Bourquin, சிப்பி (oyster) ஒன்றை வாய்க்குள் போட்டு சுவைக்கும்போது திடீரென பல்லில் ஏதோ கடினமாக கடிபட்டுள்ளது.

என் பல்தான் உடைந்து போனது என்று நினைத்தேன் என்கிறார் Eric.

Ericஇன் மனைவி Alice Dehen, தனது கணவர் உணவை விழுங்கும்போது தொண்டையில் ஏதோ சிக்கிவிட்டதுபோலும் என்று எண்ணி பதறிப்போய் என்ன என்று விசாரித்திருக்கிறார். அவருக்கு பதில் சொல்வதற்கு பதிலாக, Eric வாய்க்குள்ளிருந்து எதையோ எடுத்திருக்கிறார்.

ஒன்று, இரண்டு, மூன்று... என 48 முத்துக்களை வாய்க்குள்ளிருந்து வரிசையாக எடுத்திருக்கிறார் Eric.

ஒன்றல்ல இரண்டல்ல, 48 முத்துக்கள், சின்னதும் பெரியதுமாக... சேமித்து வைக்கப்பட்டிருந்த சிப்பி ஒன்றிற்குள் முத்துக்கள் இருந்திருக்கின்றன, Ericஇன் நண்பர் அதை சமைத்து பரிமாற, அவை Ericஇன் வாய்க்குள் சிக்கியிருகின்றன.

இது ஒரு அபூர்வ நிகழ்வாகும். காரணம், 10,000 சிப்பிகளில் ஒன்றில்தான் இயற்கையாக ஒரு முத்து கிடைக்குமாம். ஆனால் இப்படி 48 முத்துக்கள் ஒரே சிப்பியிலிருந்து கிடைப்பது, அபூர்வத்திலும் அபூர்வமாகும்!

அந்த முத்துக்களை Ericகுக்கே கொடுத்துவிட்டார் அவரது நண்பர். பல ஆண்டுகளுக்கு இந்த விருந்தும், அதில் கிடைத்த முத்துக்களும் நீங்காத நினைவுகளாக நிலைத்திருக்கும் என்கிறார் அவர்.

யாராவது இந்த முத்துக்களை வாங்க முன்வந்தால், அதிலிருந்து கிடைக்கும் பணத்தை பங்கு போட்டுக்கொள்வது என திட்டமிட்டுள்ளார்கள் நண்பர்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers