கனடாவில் கார் விபத்தில் உயிரிழந்த பெண்... நெஞ்சை உலுக்கும் புகைப்படம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காரும், லொறியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 75 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Saskatoon நகரை சேர்ந்த 75 வயது பெண்ணொருவர் இரு தினங்களுக்கு முன்னர் உள்ளூர் நேரப்படி மாலை 4.45 மணிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

காரை 80 வயதான நபர் ஓட்டினார். அப்போது எதிரில் வந்த லொறி மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே காரில் இருந்த பெண் உயிரிழந்தார்.

கார் ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

லொறி ஓட்டுனருக்கு சிறியளவில் காயம் ஏற்பட்டதற்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வரும் நிலையில் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விபரங்களை வெளியிடவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்