கனடாவில் மாயமான 7 மாத கர்ப்பிணி பெண்! அவரின் புகைப்படம் வெளியானது

Report Print Raju Raju in கனடா

கனடாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிசார் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளனர்.

Brampton நகரில் உள்ள Tomken சாலை மற்றும் Steelwell சாலையில் மிச்சேல் போப்ரே (21) என்ற இளம் பெண் கடைசியாக ஆகஸ்ட் 19ஆம் திகதி காணப்பட்டார் எனவும் அதன்பின்னர் அவர் காணாமல் போயுள்ளார் எனவும் பொலிசார் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

மேலும் மிச்சேல் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், 5 அடி உயரம் கொண்டவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

காணாமல் போன அன்று போப்ரே, பழுப்பு நிற டீ-சர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்