கனடாவில் காணாமல் போன 17 வயது சிறுமியின் நிலை என்ன? புகைப்படத்துடன் பொலிசார் வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் 17 வயதான சிறுமி மாயமானதாக பொலிசார் அறிவித்த நிலையில் தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

டொரண்டோவில் உள்ள inch Avenue West and Martin Grove சாலையில் கடந்த 9ஆம் திகதி Riana Byfield-Mitchell என்ற 17 வயது சிறுமி காணாமல் போயுள்ளார்.

5.5 அடியிலிருந்து - 5.7 அடி வரைக்குள் உயரம் கொண்ட Riana சாதாரண உடல்வாகுடன், கருப்பு நிற தலைமுடியை கொண்டிருப்பார் என பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் மூக்குத்தி குத்தியிருக்கும் Rianaவின் கையில் டாட்டூ குத்தப்பட்டிருக்கும் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிறுமி Riana தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் டுவிட்டரில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமி கிடைப்பதற்கு உதவியாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பொலிசார் பதிவிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers