கனடாவில் பெண்ணை விரட்டி சென்று கத்தியால் குத்தி கொன்ற நபர்! நேரில் பார்த்த சாட்சி சொன்ன தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பெண்ணொருவரை கத்தியை கையில் வைத்து கொண்டு ஓட ஓட விரட்டி கொலை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொரண்டோவின் Fishery சாலையில் தான் இச்சம்பவம் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6.25 மணியளவில் நடந்துள்ளது.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ஸ்டேசி டேவிஸ் கூறுகையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் எங்கள் சில விடயத்தை தெரிவித்தார்கள்.

அதன்படி, ஆண் ஒருவர் 30களில் உள்ள பெண்ணை கையில் கத்தியுடன் விரட்டிய நிலையில் அவரை பல முறை குத்தியுள்ளார்.

இதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என கூறியதாக தெரிவித்தார்.

சம்பவத்தில் தொடர்புடைய ஆண் பொலிசில் சரணடைந்துள்ளார். அவரிடம் இருந்து ஆயுதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது.

உயிரிழந்த பெண் அந்த நபருக்கு நன்கு அறிமுகமானவர் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்