புயலில் சிதைந்த பஹாமாஸ் மக்களுக்காக உருகிய கனேடிய இளம்பெண்: கடைசியில் அவருக்கு நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in கனடா

டோரியன் புயலில் சிக்கி பஹாமாஸ் தீவில் மரணமடைந்த கனேடிய இளம் பெண்ணின் சடலம் இன்னும் சில தினங்களில் சொந்த ஊருக்கு வந்து சேரும் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பஹாமாஸ் தீவில் குடியிருந்து வருபவர் 27 வயதான அலிஷியா சப்ரினா லியோலி.

இவரே செப்டம்பர் முதல் திகதி பஹாமாஸ் தீவுகளை புரட்டிப்போட்ட டோரியன் புயலில் சிக்கி மரணமடைந்தவர்.

பஹாமாஸ் தீவுகளில் புயலும் பேய் மழையும் தாக்கிய நிலையில், அங்குள்ள மக்களுக்கு உதவுங்கள் என லியோலி பல்வேறு இணையதள பக்கங்களில் கோரிக்கை விடுத்து வந்தார்.

இந்த நிலையில், தமது மகள் மற்றும் மருமகனை தொடர்பு கொள்ள முடியவில்லை என லியோலியின் தாயார் ஜோசி மெக்டோனா கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.

தற்போது லியோலியின் கணவரே இந்த நடுக்கும் தகவலை தமது உறவினர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து கனேடிய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்ட மெக்டோனா மேலதிக தகவல்களுக்காக மூன்று நாட்கள் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

புயலில் சிக்கி இதுவரை பஹாமாஸில் 50 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்