வித்தியாசமான அளவுள்ள பாதங்கள் கொண்ட இரட்டையர்கள்: ஒரு வித்தியாச சந்திப்பு!

Report Print Balamanuvelan in கனடா

ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒரு பெண் தனது இரட்டையரை நீண்ட காலமாக தேட்டிக்கொண்டிருந்தார்...

இரட்டையர்கள் என்றால் அவர்கள் உடன்பிறந்தவர்கள் அல்ல. அதாவது ஒன்ராறியோவைச் சேர்ந்த Jessica Grayக்கு ஒரு பிரச்சினை.

சிறு வயதில் ஏற்பட்ட ஒரு நோயால், அவரது இடது பாதம் வளர்ச்சியடைவது நின்றுபோனது.

எனவே அவர் வளர்ந்தபோது, ஒரு பாத அளவு 7ஆகவும் மற்ற பாதத்தின் அளவு 9 ஆகவும் ஆகிவிட, காலணிகள் வாங்குவது பெரும் பிரச்சினையாகிப்போனது.

Tricia Lo/CBC

ஒவ்வொரு முறையும் இரண்டு ஜோடி காலணிகள் வாங்கவேண்டும் அவர். ஒரு ஜோடி 7 அளவில், மற்றொன்று 9 அளவில்.

இடது காலில் 7 அளவுள்ள காலணியையும் வலது காலில் 9 அளவுள்ள காலணியையும் அணிந்துகொள்வார் அவர்.

இதனால் குறைந்த விலையில் காலணிகள் கிடைக்குமா, அல்லது தள்ளுபடியில் காலணிகள் கிடைக்குமா என அவர் தேடுவதுண்டு.

ஒரு நாள் அவருக்கு ஒரு திட்டம் தோன்றியது, நம்மைப்போலவே பிரச்சினையுடைய இன்னொருவர் இருந்தால், இருவரும் காலணிகளை பகிர்ந்துகொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்பட, உள்ளூர் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார் Jessica.

Markus Schwabe/CBC

சரியாக 24 மணி நேரத்திற்கு பிறகு கால்கரியில் காலை தூக்கத்திலிருந்து எழுந்த Genene Maynardக்கு அவரது கணவர் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருந்தார்.

அது Jessica கொடுத்த விளம்பரம். இதில் என்ன சர்ப்ரைஸ் என்றால், Geneneக்கும் அதே பிரச்சினை.

சிறு வயதில் ஏற்பட்ட நோயால் வலது பாதம் வளர்வது நின்றுபோனது. எனவே அவரும் ஒவ்வொரு முறையும் காலணி வாங்கும்போது இரண்டு ஜோடி காலணிகள் வாங்குவார், ஒன்று 7 அளவுடையது மற்றொன்று 9 அளவுடையது! சில நாட்களுக்குமுன் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்.

Tricia Lo/CBC

தன்னுடைய ‘பாத இரட்டையரை’ கண்டுபிடித்துவிட்டேன் என Jessicaவுக்கு ஒரே சந்தோஷம், Geneneக்கும்தான்.

நீண்டகாலமாக சேமித்து வைத்திருந்த பயன்படுத்தாத காலணிகளை பகிர்ந்துகொண்டுள்ளார்கள் இருவரும்.

இனி காலணி வாங்கவேண்டும் என்றாலும் இரண்டு ஜோடிதான் வாங்கவேண்டும், ஆனால் யாருக்கும் நஷ்டமில்லை, அத்துடன் தள்ளுபடி கிடைக்குமா என்றெல்லாம் இருவரும் காத்திருக்கவும் வேண்டியதில்லை என்பதில் இருவருக்கும் சரிபாதி மகிழ்ச்சிதான்.

Markus Schwabe/CBC

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்