லண்டனுக்கு திடீரன விஜயம் செய்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கனடா

கனடாவின் லண்டன் நகரில் உள்ள ஒரு தொடக்க பள்ளிக்கு திடீரென விஜயம் செய்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்குள்ள மாணவ மாணவிகளுடன் மகிழ்ச்சியுடன் உரையாடினார்.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று லண்டனில் உள்ள Blessed Sacrament தொடக்க பள்ளிக்கு திடீரன விஜயம் செய்தார்.

பின்னர் அங்குள்ள வகுப்பறைக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் உட்கார்ந்து Why I Love Canada என்ற புத்தகத்தை படித்தார்.

இதையடுத்து அவர்களுக்கு பிடித்த விடயங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசுகையில், பள்ளியில் ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு புதிய தொடக்கம் தான். அதனால் எதாவது புதிய விடயத்தை செய்ய முயற்சி செய்யுங்கள்.

ஆசியர்களுடன் அன்பாக பழகுங்கள், நானும் ஒரு காலத்தில் ஆசிரியராக இருந்தவன் தான்.

உங்களின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் அவர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என கூறினார்.

ஜஸ்டினின் திடீர் விஜயம் குறித்து பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் மிச்சேல் கென்னடி கூறுகையில், பிரதமர் பள்ளிக்கு வருகிறார் என்பது நேற்று முன் தினம் தான் எங்களுக்கு தெரியும்.

நான் உள்ளிட்ட பல மாணவர்கள் ஜஸ்டின் வருவதையொட்டி மிகவும் த்ரில்லிங்காக உணர்ந்தோம் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்