சுறாக்கள் நிறைந்த தொட்டிக்குள் நிர்வாணமாக குதித்த கனேடியர் கைது!

Report Print Balamanuvelan in கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு இளைஞர், ரொரன்றோவிலுள்ள மீன் காட்சியகம் ஒன்றில் சுறாக்கள் உட்பட பல ஆபத்தான மீன்கள் இருந்த ராட்சத தொட்டிக்குள் நிர்வாணமாக குதித்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கனேடியரான David Weaver (37), தனது தோழி ஒருவருடன் ரொரன்றோவிலுள்ள மீன் காட்சியகம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது பார்வையாளர்கள் பலர் கூடியிருந்த நிலையில், உடைகளை அகற்றிவிட்டு நிர்வாண நிலையில் சுறாக்கள் முதலான ஆபத்தான மீன்கள் நிறைந்த தொட்டிக்குள் குதித்துள்ளார்.

பார்வையாளர்கள் அதிர்ச்சியடைய, அங்கு ஏதோ பிரச்சினை என்பதை அறிந்த பாதுகாவலர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

அவர்களது புகாரின்பேரில் David கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட David, தனக்கு இம்மாதிரியான திடீர் திரில் அனுபவங்கள் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

David ஓராண்டுக்கு பொலிசாரின் மேற்பார்வையில் வாழவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நீதிமன்றம், அவர் மன நல ஆலோசனை பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இனி மீன் காட்சியகத்திற்குள் செல்வதற்கு Davidக்கு அனுமதியில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்