கனடாவில் துப்பாக்கி குண்டுக்கு பலியான இலங்கை இளைஞர்: கதறும் உறவினர்கள், நண்பர்கள்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் ஸ்கார்பாரோவில் வியாழனன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இலங்கை இளைஞர் தொடர்பில் அவரது உறவினர்களும் நண்பர்களும் அடையாளம் கண்டுள்ளனர்.

ரொறான்ரோவின் மிடில்ஃபீல்ட் சாலை மற்றும் மெக்னிகால் அவென்யூ பகுதியில் உள்ளூர் நேரப்படி சுமார் 10 மணியளவில் பொலிசாருக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவப்பகுதிகு விரைந்த பொலிசார் துப்பாக்கி குண்டுக்கு இரையாகி குற்றுயிராக கிடந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞர சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தகவல் வெளியானது.

தற்போது, கொல்லப்பட்ட இளைஞர் இலங்கையை சேர்ந்த 25 வயதான சாரங்கன் சந்திரகாந்தன் எனவும், குறித்த தகவலை அவரது பெற்றோரும் நண்பர்களும் வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்றுதகவல் வெளியிட்டுள்ளது.

வாகனம் ஒன்றில் இரண்டு துப்பாக்கி குண்டு காயங்களுடன் அவரை மீட்டதாக கூறும் பொலிசார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல் எதையும் வெளியிட மறுத்துள்ள பொலிசார், விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், பொலிசாரை நாடவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்திரகாந்தனின் மறைவு அவரது குடும்பத்தாரையும் நண்பர்களையும் உலுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்