லொட்டரியில் 10 மில்லியன் டொலர் அள்ளிய கனேடியர்... வெளிநாட்டில் நேர்ந்த துயரம்: சதி என கதறும் குடும்பம்

Report Print Arbin Arbin in கனடா

லொட்டரியில் 10 மில்லியன் டொலர் அள்ளிய கனேடியர் வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அவரது உறவினர்களை உலுக்கியுள்ளது.

கனடாவின் ரொரன்ரோ பகுதியில் குடியிருந்து வந்த 41 வயதான மைக்கேல் கெப்ரு என்பவரே எத்தியோப்பியா நாட்டில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் லொட்டரியில் 10 மில்லியன் டொலர் தொகையை வென்றதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வேலையை உதறிவிட்டு, பிறந்த நாடான எத்தியோப்பியாவுக்கு சென்றுள்ளார்.

தமக்கு லொட்டரியில் பெரிய தொகை பரிசாக கிடைத்தால், தேவையானவர்களுக்கு கண்டிப்பாக உதவுவேன் என அடிக்கடி சொல்லி வந்துள்ளார் கெப்ரு.

இந்த நிலையிலேயே தாம் பிறந்த நாட்டுக்கு தம்மால் இயன்ற உதவி செய்வதற்காக சென்றதாக அவரது உறவினர் சோசுனா அஸ்ஃபா தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது அவர் மரணமடைந்துள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வந்துள்ளதாக கூறும் அஸ்ஃபா,

சனிக்கிழமை இரவு அவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் பொலிசார் தங்களுக்கு தகவல் அளித்துள்ளனர் என்றார்.

கெப்ருவின் மறைவில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறும் உறவினர்கள் எத்தியோப்பியாவில் உள்ள கனேடிய தூதரகத்திற்கும் இந்த விவகாரம் தொடர்பில் உதவ கோரிக்கை வைத்துள்ளனர்.

எத்தியோப்பியாவில் என்ன நடந்தது என்பது தொடர்பில் தங்களுக்கு ஏதும் தெரியாது என கூறும் அஸ்ஃபா, உள்ளூர் பொலிசாரும் தெளிவான பதில்களை தர மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்