தர்ஷிகா கொல்லப்பட்ட விவகாரம்... கணவர் தொடர்பில் அம்பலமாகும் பின்னணி

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் இலங்கைப் பெண் தர்ஷிகா கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரது முன்னாள் கணவர் சசிகரன் தொடர்பில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் செப்டம்பர் 11 ஆம் திகதி கொடூரமாக கொல்லப்பட்ட தர்ஷிகாவின் முன்னாள் கணவர் சசிகரன் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர் என்ற தகவல் பரப்பப்பட்டது.

தர்ஷிகாவின் வாழ்க்கை சிதைவதற்கும் அது கொலையில் முடிவதற்கும் அதுவும் ஒரு காரணம் என பரவலாக பேசப்பட்டது.

இது அவரை சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவிக்கவா அல்லது, உண்மையில் அவருக்கு உளவியல் பாதிப்பு உள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

மட்டுமின்றி, தர்ஷிகா இளைஞர் ஒருவருடன் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படம் ஒன்றும் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படத்தில் தர்ஷிகாவுடன் இருக்கும் இளைஞர் அவருக்கு உறவினரா? அல்லது தர்ஷிகா மறுமணமானவாரா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

Facebook

மேலும், தர்ஷிகாவை மணம் முடிக்க கடன்பட்டது இன்னமும் அடைக்கப்படவில்லை எனவும், அதற்காகவே இரண்டு வேலை செய்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்லது.

இதன் காரணமாக சசிகரன் மருந்து எடுத்தும் வந்துள்ளார். கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல, மன அழுத்தம் என்பது தற்போது பெருகி வரும் நிலையில்,

இதை உளவியல் நோயாக கருத முடியாது என மருத்துவர்களே தெரிவிக்கின்றனர். அதையே தர்ஷிகா உறவினர்கள் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர் என பரப்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தர்ஷிகா விவகாரத்தில் யார் தவறிழைத்தார்கள் என்பது மர்மமாகவே இருக்கும் நிலையில், ஒரு கொலை நடந்துள்ளது.

இந்த விவகாரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

Facebook
Facebook

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்