பிரதமர் ட்ரூடோவின் செயல்கள் போதுமானதாக இல்லை.. உலக தலைவர்களை விளாசிய சிறுமி! ஆனால் அவர் செய்த செயல்

Report Print Kabilan in கனடா

கனடாவில் பேரணி நடத்திய காலநிலை ஆர்வலரான சிறுமி கிரேட்டா, அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்கள் போதுமானதாக இல்லை என்று குற்றம்சாட்டினார்.

ஐ.நா காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில், ஸ்வீடனைச் சேர்ந்த காலநிலை ஆர்வலரான சிறுமி கிரேட்டா, உலக தலைவர்களை கடுமையாக விளாசினார்.

எனது குழந்தைப்பருவத்தையும், கனவுகளையும் அழிக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என்று கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து கிரேட்டா உலகளவில் கவனம் பெற்றார். பல்வேறு தலைவர்களும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கனடாவின் மாண்ட்ரியல் நகரில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுக்காக, கிரேட்டா பேரணியில் ஈடுபட்டார். இதற்கிடையில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சிறுமி கிரேட்டாவை நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகு, கிரேட்டாவை ‘ஒரு தலைமுறையின் குரல்’ என்று ட்ரூடோ வர்ணித்தார்.

Reuters

அவர் கூறும்போது, கிரேட்டா ஒரு தலைமுறையின் குரல். அவர், தலைவர்களை மேலும் சிறப்பாக செயல்பட செய்யுமாறு அழைப்பு விடுக்கின்ற இளைஞர்களின் குரல் என தெரிவித்தார். மேலும், தேர்தலில் மீண்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரு தசாப்தத்தில் 2 பில்லியன்கள் மரங்களை நடுவோம் என்று தனது திட்டத்தை அறிவித்தார்.

ஆனால், ட்ரூடோ குறித்து கிரேட்டா கூறுகையில் ‘அவரது செயல்கள் வெளிப்படையாக போதுமானதாக இல்லை, இது மிகப்பெரிய பிரச்னை. இங்கு நடைமுறை தவறாக உள்ளது. எல்லா அரசியல்வாதிகளுக்கும் நான் கூறும் செய்தி ஒன்றுதான்: விஞ்ஞானத்தைக் கேட்டு செயல்படுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

எனினும் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது குழந்தைகளை ஊக்குவிப்பதற்கும், எங்கள் அனைவரையும் அதிகமாக செய்ய தூண்டுவதற்கும், அதை சாத்தியப்படுத்துவதற்கு ஒரு இயக்கத்தை உருவாக்குவதற்கும் நன்றி கிரேட்டா தன்பெர்க்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்