வெளிநாட்டில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட கனடா நபருக்கு நேர்ந்த துயரம்!

Report Print Kabilan in கனடா
85Shares

கனடாவைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாட்டில் சாகசப் பயணம் மேற்கொண்டபோது, எதிர்பாராத விதமாக மலை உச்சியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அமைந்துள்ளது கிளிமாஞ்சாரோ மலைப்பகுதி. உலகெங்கிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம்.

பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து மலையேறுவது, பாராக்லைடிங் சாகத்தில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்த ஜஸ்டின் கைலோ என்ற சுற்றுலாப் பயணியும் கிளிம்ஞ்சாரோவிற்கு வந்துள்ளார்.

சாகச பயணத்தில் ஈடுபட நினைத்த அவர், மலை உச்சியில் இருந்து பாராக்லைடிங் சாகசத்தை மேற்கொண்டார்.

அவர் தரையிறங்க முயற்சித்தபோது, தான் அணிந்திருந்த பாராசூட்டை ஜஸ்டின் இயக்கியுள்ளார். ஆனால், தக்க சமயத்தில் பாராசூட் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பிடிமானத்தை இழந்த அவர், சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜஸ்டின் கைலோ உயிரிழந்தார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்