பறக்கும் விமானத்தில் 7 மணி நேரம் அவஸ்தைப்பட்ட இளம்பெண்: அடம்பிடித்த கனடா விமான ஊழியர்கள்

Report Print Arbin Arbin in கனடா

அயர்லாந்து நாட்டு இளம்பெண் ஒருவர் கனேடிய விமானம் ஒன்றில் ஊழியர்களின் அடாவடியால் தமது இருக்கையிலேயே சிறுநீர் கழிக்க கட்டாயப்படுத்தப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

குறித்த இளம்பெண் அதே இருக்கையில் அமர்ந்தே சுமார் 7 மணி நேரம் கடும் அவஸ்தையுடன் பயணம் செய்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கொலம்பியாவின் போகோடா நகரத்தில் இருந்து டப்ளின் செல்வதற்காக 26 வயது அயர்லாந்து இளம்பெண் ஒருவர் கனடா ஏர் விமானத்தில் ரொரன்ரோவுக்கு வந்துள்ளார்.

ஏற்கெனவே அந்த விமானமானது கனடாவில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக கிளம்பியுள்ளது. இந்த நிலையில் குறித்த 26 வயது இளம்பெண், விமான ஊழியர்களிடம் தம்மை கழிவறை செல்ல அனுமதிக்குமாறு கோரியுள்ளார்.

ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. பல முறை கெஞ்சியும் அவர்கள் அவரை கழிவறைக்கு அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இன்னும் தாமதித்தால் தமது நிலைமை மோசமாகும் என சூசகமாக தெரிவித்தும் அவர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

ரொரன்ரோ விமான நிலையத்தில் இருந்த அந்த 2 மணி நேரமும் அவர் நான்கு முறை தம்மை கழிவறையை பயன்ப்டுத்திக் கொள்ள அனுமதிக்க அவர் கோரியும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஒவ்வொருமுறையும் விமான ஊழியர்கள் வலுக்கட்டாயமாக அவரை திருப்பி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

ரொரன்ரோ விமான நிலையத்தில் இருந்து அந்த விமானம் புறப்பட தாமதிப்பது தமக்கு மேலும் அவஸ்தையை ஏற்படுத்தியது என அவர் கண் கலங்கியபடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தமது இருக்கையிலேயே சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார்.

(Image: Getty Images)

மட்டுமின்றி, எஞ்சிய பயண நேரம் முழுவதும் சிறுநீர் கழித்த அதே நிலையில் சுமார் 7 மணி நேரம் அவஸ்தைக்கு உள்ளானது தமது வாழ்க்கையில் மறக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்தில் இருந்து வெளியேறும்போது, அந்த விமான ஊழியர்களை தாம் தேடியதாகவும், ஆனால் அவர்கள் மிகவும் சாமர்த்தியமாக ஒளிந்து கொண்டது தமக்கு ஆத்திரத்தையே ஏற்படுத்தியது என்றார்.

ரொரன்ரோவில் ஏதேனும் ஒரு ஹொட்டலில் அந்த உடைகளை மாற்றவும் குளிக்கவும் பணம் செலுத்த தாம் தயாராக இருந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பு கூட அவர்கள் ஏற்படுத்தி தரவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனையடுத்து டப்ளின் திரும்பியதும் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட கனடா ஏர் நிறுவனம் சுமார் 300 பவுண்டுகள் அளவுக்கு விமானங்களுக்கான voucher ஒன்றை அளித்துள்ளது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்