தர்ஷிகாவுக்கு நடந்தது போலவே எனக்கும் நடக்கலாம்: கணவனிடமிருந்து பிரிந்து வாழும் மற்றொரு பெண்!

Report Print Balamanuvelan in கனடா

விவாகரத்து செய்த ஒரு நபர், தனது மகளை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் தன்னிடம் இருக்கும் வெடிகுண்டை வெடிக்கச் செய்து நீதிமன்றத்தையே தகர்த்துவிடுவதாகவும் மிரட்டியிருந்தார்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி கனடாவில் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதால் திருமணமாகி 18 மாதங்களிலேயே இருவரும் பிரிந்தனர்.

அவர் தனது மனைவியை தொடர்பு கொள்ளக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில்தான் தனது மகளை தன்னிடன் ஒப்படைக்கக்கோரி அந்த நபர் நீதிமன்றத்தை தகர்ப்பதாக மிரட்டல் விடுக்க, கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டார்.

தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி அவர் அளித்திருந்த ஜாமீன் மனு, வரும் 7ஆம் திகதி விசாரணைக்கு வரும் நிலையில், அவரை விடுவிக்கக்கூடாது என்றும், அவ்வாறு விடுவித்தால் தர்ஷிகாவை அவரது கணவர் கொன்றதுபோலவே, தன்னை தனது கணவர் கொன்றுவிடுவார் என தான் அஞ்சுவதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

அந்த பெண் மற்றும் அவரது மகளின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

எனவே அந்த நபரின் பெயரை வெளியிட்டால், அவரது மனைவி, மகளின் பெயரும் வெளியே தெரிந்துவிடும் என்பதால் அவரது பெயரையும் பத்திரிகைகள் வெளியிடாமல் இருக்கின்றன.

இந்நிலையில், தனது கணவர் ஏற்கனவே தன்னை இரண்டுமுறை கொலை செய்ய முயற்சித்ததாகவும், மூன்றாவது முறை அவர் தன்னை தப்பவிடமாட்டார் என்று நினைப்பதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பத்திரிகை ஒன்றிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர், தான் சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த தர்ஷிகா கொலை வழக்கு குறித்து படித்ததாக தெரிவித்துள்ளார்.

எனது முன்னாள் கணவர் கடந்த ஆறு ஆண்டுகளாக என்னை தொந்தரவு செய்து வருகிறார், துஷ்பிரயோகம் செய்து வருகிறார், சமீபத்தில் நீதிமன்றத்தையே தகர்த்து விடுவதாகவும் மிரட்டினார்.

நீங்கள் சமீபத்தில் வெளியிட்ட தர்ஷிகாவின் கதையில் என்ன நடந்ததோ அதே எனது வாழ்விலும் நடந்துவிடும் என்று அஞ்சுகிறேன், என்று அந்த பத்திரிகைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார் அவர்.

தர்ஷிகாவையும் இதேபோல் துன்புறுத்திய அவரது முன்னாள் கணவர் சசிகரன், பட்டப்பகலில் கத்தியால் வெட்டி அவரை நடுவீதியில் கொலை செய்ததும், தற்போது அவர் தீர்ப்புக்காக காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்