முதல் சந்திப்பில் மலர்ந்த காதல்.... காதலியிடம் இருந்து வந்த அந்த தகவல்: 4,000 மைல்கள் பறந்து சென்ற கனேடியர்

Report Print Arbin Arbin in கனடா

புற்றுநோயால் அவதியுறும் காதலியை தேற்றுவதற்காக கனேடிய இளைஞர் ஒருவர் சுமார் 4,000 மைல்கள் தாண்டிச் சென்றுள்ள சம்பவம் வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

கனடாவின் ஒன்ராரியோவில் தமது குடும்பத்தினரின் மதுபான தொழிலை கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து நடத்தி வந்துள்ளார் 31 வயதான எமிலி கோஸ்லிங்.

தற்போது லண்டனில் குடும்பத்தினருடன் குடியேறியுள்ள எமிலி கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகருக்கு தொழில்முறை பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அங்கே சம வயதுடையவர் மட்டுமின்றி மதுபானம் தொடர்பான தொழில் செய்துவரும் Dave Bulters என்பவரை சந்தித்துள்ளார்.

முதல் சந்திப்பிலேயே இருவரும் கதல் வசப்பட்ட நிலையில், 2018 ஆம் ஆண்டு எமிலி குடும்ப சூழல் காரணமாக லண்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

இதனிடையே ஒருமுறை கூட கனடாவுக்கு தொழில்முறை பயணம் மேற்கொண்ட எமிலி, தமது காதலர் Dave Bulters உடன் டேட்டிங் சென்றுள்ளார்.

இந்த சந்திப்பு இருவருக்கும் மிக நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, தங்களது எதிர்காலம் குறித்தும் அதன் பின்னர் கருத்து பரிமாறிக்கொள்ளத் தூண்டியுள்ளது.

சில ஆயிரம் மைல்கள் தொலைவில் இருந்தாலும், இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் அப்போதுதான் பேரிடியாக எமிலிக்கு அந்த தகவல் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் தமக்கு ஏற்பட்ட சில உடல் உபாதைகள் தொடர்பில் மருத்துவரை அணுகிய அவருக்கு, கடந்த மார்ச் மாதம் கருப்பை புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த தகவல் அறியவந்த ஒரே வாரத்தில் Dave Bulters கனடாவில் இருந்து லண்டனுக்கு பறந்துள்ளார்.

தொடர்ந்து கீமோதெரபி செய்து கொண்ட எமிலி, அறுவை சிகிச்சை மூலம் ஏழு அங்குலம் கொண்ட கட்டி ஒன்றையும் அவரது கருப்பையில் இருந்து நீக்கியுள்ளனர்.

எமிலிக்கு கருப்பை புற்றுநோய் என உறுதி செய்யப்பட்டதும், Dave Bulters உடன் ஒன்றாக வாழும் கனவு இனி பலிக்காது என அவர் கண்கலங்கியுள்ளார்.

ஆனால் Dave Bulters தமது காதலிக்கு உதவ உடனடியாக தமது வேலையை ராஜினாமா செய்து கொண்டு லண்டனுக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்துள்ளார்.

லண்டனில் கடந்த சில மாதங்களாக Dave Bulters உடன் ஒன்றாக வாழ்ந்தது, தமது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என குறிப்பிட்டுள்ள எமிலி, தங்களது உறவுமுறை மேலும் நெருக்கமானது என தெரிவித்துள்ளார்.

தமக்கு ஏற்பட்ட புற்றுநோயானது எனது வாழ்க்கையை மட்டும் சிதைக்கவில்லை, Dave Bulters-ன் வாழ்க்கையையும் சிதைத்துள்ளது என வருத்தம் தெரிவித்துள்ள எமிலி,

அவரது முடிவு முதலில் தமக்கு ஆத்திரத்தை வரவழைத்து எனவும், ஆனால் அதை ஏற்றுக்கொள்ள அவர் கட்டாயப்படுத்தினார் எனவும் எமிலி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்