இறந்த பின்னரும் கொல்லப்படும் தர்ஷிகா ஜெகன்னாதன்: ஒரு பத்திரிகையாளரின் உள்ளக்குமுறல்!

Report Print Balamanuvelan in கனடா

கத்தியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட பின்னரும் மீண்டும் மீண்டும் கொல்லப்படுகிறார் தர்ஷிகா ஜெகன்னாதன் என்கிறார், பிரபல கனேடிய பத்திரிகையாளர் ஒருவர்.

ரொரன்றோவில் பிரபல கனேடிய பத்திரிகை ஒன்றில் பணியாற்றும் பத்திரிகையாளரான Shree Paradkar என்பவரின் கருத்துக்கள் இவை.

இலங்கை வன்முறைக்கு தப்பி கனடாவுக்கு வருகிறார்கள் இலங்கை தமிழர்கள் பலர். ஆனால் மரணத்தை சந்திப்பதற்காக இலங்கைக்கு வந்திருக்கிறார் தர்ஷிகா... பல்வேறு வகையில் விதி தர்ஷிகாவின் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறது. முதலில் அவரது வாழ்க்கைச்சூழல்: போரால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தது.

அடுத்தது அவர் ரொரன்றோவில் சந்தித்த விரும்பத்தகாத அனுபவங்கள்: உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கணவனின் கைகளால் அவர் அனுபவித்த வேதனை.

குடும்பத்தை தொடர்பு கொள்வதற்கு மொபைல் போன் கொடுக்கப்படாதது, தலையணையில் முகம் அழுத்தப்பட்டது, உடல் ரீதியாக தாக்கப்பட்டது என சில விடயங்களை அவர் நீதிமன்றத்தில் கோடிட்டுக் காட்டினார்.

என்றாலும் சசிகரன் விடுவிக்கப்பட்டார். 18 மாதங்களுக்குப்பிறகு தர்ஷிகா கொலை செய்யப்பட்டார், கையில் கத்தியுடன் சசிகரன் அவரை துரத்துவதை கண்ணால் கண்டவர்கள் சாட்சியமளித்தார்கள், சசிகரன் கைது செய்யப்பட்டார். அத்துடன் எதுவும் முடியவில்லை.

இப்போது ஒரு புது விடயம் தொடங்கியுள்ளது. அதை ஆங்கிலத்தில் victim-blaming என்கிறார்கள்.

அதாவது, யார் பாதிக்கப்பட்டாரோ, அவரையே குற்றம் சொல்வது, அவர் மீதே பழி போடுவது, அவர் என்ன செய்தாரோ யாருக்கு தெரியும்? என கழுத்தை வெட்டிப் பேசுவது.

ஆம், அதுதான் கடந்த சில வாரங்களாக தர்ஷிகாவுக்கும் நடந்து வருகிறது. இணையத்தில் உலவும் சில புகைப்படங்கள் தர்ஷிகாவின் ஒழுக்கத்தை கேள்வி கேட்கின்றன.

திருமணம் ஒன்றில் புடவையில் தர்ஷிகா நடனமாடும் ஒரு வீடியோ, கணவன் அல்லாத வேறொரு ஆணுடன் தர்ஷிகா நிற்கும், அவருக்கு அந்த ஆண் கேக் ஊட்டும் ஒரு புகைப்படம் என வரிசையாக சில விடயங்கள்...

அந்த படங்களின் கீழ், அவளை கொலை செய்தவர் பைத்தியக்காரரா அல்லது அவளால் பைத்தியக்காரராக்கப்பட்டாரா என்ற கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.

அவர் தாமாகவே கனடாவுக்கு வந்தாரா அல்லது தனது ரகசிய காதலனை தனக்கு ஸ்பான்சர் செய்ய சொல்லி வந்தாரா?

என்னுடைய சகோதரனுக்கு ஏதோ ஆகிவிட்டது, அந்த மோசமான பெண் என் சகோதரனைக் கொன்றுவிட்டாள் என்று ஒருவர் எழுதுகிறார்.

பாவம் அந்த பெண், என்னைப் பொருத்தவரை இவர்கள் சொல்வது போலவே, தர்ஷிகாவுக்கு ஒரு காதலன் இருந்திருக்கவேண்டும் என்று விரும்புகிறேன், அப்படியாவது அவர் நன்றாக வாழ்ந்திருக்கமாட்டாரா என எனது மனது தவிக்கிறது என்கிறார் Shree Paradkar.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்