கனடாவில் கமெராவில் சிக்கிய கரடிக்குடும்பம்: ஒரு பெரிய அபாயத்தை விளக்கும் புகைப்படம்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நீர் நிலை ஒன்றின் அருகே உணவு தேடி அலையும் கரடிக்குடும்பம் ஒன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படம் புவி வெப்பமயமாதலின் கோர விளைவுகளை உலகுக்கு எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

அதாவது குளிர்காலத்தில் hibernation என்னும் குளிர்காலத் தூக்கத்துக்கு செல்வதற்கு முன் கரடிகள் சால்மன் வகை மீன்களை வேட்டையாடி உண்ணும். உண்டு கொழுத்தபின், அவை உடலில் போதுமான கொழுப்புடன் தூக்கத்திற்கு செல்லும்.

CREDIT: ROLF HICKER

ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தில் இரண்டு விடயங்கள் தெரியவந்துள்ளன.

ஒன்று, அந்த கரடிகள் கொழுத்தவையாக இல்லை, மெலிந்து உள்ளன. இரண்டு, அந்த நீர் நிலையில் போதுமன சால்மன் மீண்கள் இல்லை. புவி வெப்பமயமாதலால் நீர் நிலைகள் வெப்பமடைவதால் அவற்றில் சால்மன் மீன்களைக் காண முடிவதில்லை.

இம்முறை மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் பலரும் தாங்கள் சால்மன் மீன்களைக் கான முடியாததைக் குறித்து குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமயமாதலின் கோர விளைவுகளுக்கு இந்த புகைப்படம் ஒரு சிறந்த ஆதாரமாகும்.

Facebook
CREDIT: ROLF HICKER

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்