கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த இந்திய இளம் பெண் உள்ளிட்ட மூன்று பேர்! சம்பவத்தின் பின்னணி என்ன?

Report Print Raju Raju in கனடா

இந்தியாவை சேர்ந்த இளம் பெண் உள்ளிட்ட மூவர் கனடாவில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் ஒன்றாறியோவில் உள்ள கல்லூரியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தன்வீர் சிங், குர்விந்தர் சிங், ஹர்பிரீத் கவுர் ஆகிய மூவரும் படித்து வருகின்றனர்.

20களில் உள்ள மூவரும் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக சுவற்றின் மீது மோதியது.

இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. உள்ளிருந்த மூவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.

இந்த கோர விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரேனும் இருந்தால் தங்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்