கனடாவில் சேவல் சண்டைக்காக பிறப்பிக்கப்பட்ட வாரண்ட்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் சேவல் சண்டை தொடர்பில் வாரண்ட் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் விலங்குகள் வதை தடுப்பு அமைப்பு, சர்ரேயில் உள்ள ஒரு வீடு ஒன்றில் உள்ளவர்கள் மீது வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதுவரை நாங்கள் அந்த வீட்டிலிருந்து பறவைகள் எதையும் கைப்பற்றவில்லை, ஆனால் ஆதாரங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளோம், அவற்றை வைத்து அந்த இடத்தில் குற்றங்கள் நடந்தனவா என்பதை ஆராய்ந்து வருகிறோம் என்று விலங்குகள் வதை தடுப்பு அமைப்பின் தலைமை அலுவலர் ஒருவர் கூறினார்.

விலங்குகள் வதை குற்றவியல் சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் குற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவு, பறவைகள் சண்டையை வைத்து பணம் பார்ப்பவர்கள், அதற்கு உதவியாக இருப்பவர்கள் குற்றவாளிகள் என்கிறது.

இரண்டாவது பிரிவின்படி, விலங்குகள் சண்டைக்கான ஒரு இடத்தை ஆயத்தம் செய்வது அல்லது அதற்கு இடத்தை அளிப்பது ஆகியவையும் குற்றமாகும்.

இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படுவதோடு, 18 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

அதே குற்றத்தை இரண்டாவது முறை செய்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அத்துடன் விலங்குகளை வைத்துக்கொள்ள, சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்படும்.

குற்றம் சமீபத்தில்தான் நடைபெற்றுள்ளது என்பதால், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண சிறிது காலம் பிடிக்கும் என விலங்குகள் வதை தடுப்பு அமைப்பின் தலைமை அலுவலரான Marcie Moriarty தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்