கனேடிய வழக்குரைஞரால் சிக்கலுக்கு ஆளான இலங்கையர்: வெளியான முக்கிய தீர்ப்பு

Report Print Arbin Arbin in கனடா

கனேடிய வழக்குரைஞர் ஒருவரின் கவனக்குறைவு காரணமாக ஆயிரக்கணக்கான டொலர் தொகையை இழந்த இலங்கையர் ஒருவருக்கு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது கனடாவின் கால்கரி நகரில் குடியிருக்கும் 64 வயதான இலங்கையர் Nalliah Balachandran என்பவரே வழக்குரைஞர் ஒருவரின் கவனக்குறைவு காரணமாக பெரும் பணத்தை இழந்தவர்.

இவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் ஒன்ராரியோ உயர் நீதிமன்ற நீதிபதி கடந்த 2012 ஆம் ஆண்டு 188,646 டொலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

இந்த தொகையானது இதுவரை வழங்கப்படாமல் இருந்து வந்தது. கனேடிய வழகுரைஞர் Michael (Mike) J. Webster என்பவருக்கு எதிராகவே Nalliah Balachandran வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஒன்ராரியோ நீதிமன்றம் உரிய தீர்ப்பு வழங்கியும் இதுவரை இழப்பீடு தொகையை பெற முடியாமல் அவதிப்பட்டு வந்த Nalliah Balachandran,

தாம் கடனாளியாக வலம் வந்ததாகவும், இனி மேல் அந்த கடனை திருப்பி செலுத்த முடியுமா என்ற கேள்வி என்னை வாட்டி வதைத்து வந்தது என கண்கள் கலங்க தெரிவித்துள்ளார்.

Nalliah Balachandran மட்டும்மல்ல, கனடாவில் இதுபோன்ற பல்வேறு வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டும், தீர்ப்பு வழங்கப்பட்டும், பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை கையளிக்கப்படாமலும் தற்போதும் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

Nalliah Balachandran-கு விதிக்கப்பட்ட இழப்பீடு தொகையில் தற்போது 150,000 டொலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே அறிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற வழக்குகளில் சுமார் 13 வழகுரைஞர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட 14 நபர்கள் தொடுத்த வழக்கில் சுமார் 552,565 டொலர் தொகை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ஆல்பர்ட்டா சுகாதார துறையில் பணியாற்றி வந்துள்ள Nalliah Balachandran, உரிய நேரத்தில் கிடைத்த தொகை எனவும்,

பல ஆண்டுகளாக தாமும் மனைவியும் பட்ட துயரத்தில் இருந்து கொஞ்சம் ஆறுதல் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்