கசிந்தது.. கனடா பிரதமர் ட்ரூடோவின் சர்ச்சையான படம்.. மூகமுடி அணிந்த மோசடி மன்னன் என விளாசும் எதிர்க்கட்சி

Report Print Basu in கனடா

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போலியானவர் மற்றும் மோசடி மன்னன் என பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னனியில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் Andrew Scheer கடுமையாக விமர்சித்துள்ளார்.

எதிர்வரும் ஆக்டோபர் 21ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் இரண்டாவது முறை பிரதமர் பதவிக்காக ஜஸ்டின் ட்ரூடோ போட்டியிட முடிவு செய்துள்ளார். இந்நிலையில், திங்கட்கிழமை நடந்த இரண்டாவது விவாதத்தின் போது ட்ரூடோவை Andrew Scheer கடுமையாக விமர்சித்தார்.

இம்முறை ட்ரூடோவின் கருப்புமுகம் பிரச்னையை கையில் எடுத்த Scheer, நீங்கள் ஒரு போலியானவர் மற்றும் மோசடி மன்னன், நீங்கள் இந்த நாட்டை நிர்வாகிக்க தகுதியற்றவர் என ட்ரூடோவை சாடினார்.

கடந்த 2001ம் ஆண்டு 29 வயதில் ட்ரூடோ அரபியன் நைட்ஸ் பார்ட்டியில் முகம், கழுத்து மற்றும் கை என கருப்பு நிறத்தில் அலங்காரம் செய்திருந்த புகைப்படத்தை கடந்த மாதம் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டது.

Google

இதை கையில் எடுத்த எதிர்கட்சியினர் ட்ரூடோ மீது கருப்புமுகம் பிரச்னையை கிளப்பினர். மேலும், ட்ரூடோ உயர்பள்ளியில் படிக்கும் போது விழாவின் போது கருப்புமுகத்துடன் பங்கேற்ற வீடியோவும் வெளியானது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ட்ரூடோ, நான் எத்தனை முறை முகத்தில் கருப்பு அலங்காரம் செய்தேன் என தெரியவில்லை, ஏனெனில் மூன்றாவது முறை எப்போது கருப்பு அலங்காரம் போட்டேன் என்பதும் நியாபகம் இல்லை என கூறினார்.

எத்தனை முறை கருப்புமுக அலங்காரம் செய்தார் என்பது கூட அவருக்கு நியாபகம் இல்லை, அவர் எப்போதும் மூகமுடி அணிந்திருப்பதே அதை நினைவுகூர முடியாதற்கான உண்மை காரணம் என Andrew Scheer சாடினார்.

இந்ந சர்ச்சை உலகளவில் தலைப்பு செய்தியாக வந்தது. எனினும், இது ட்ரூடோவின் வாக்குகளை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

Scheer தனது பிரச்சார தளத்தை மறைப்பதாக குற்றம்சாட்டிய ட்ரூடோ, கன்சர்வேடிவ் தலைவர் பல நல்ல திட்டங்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்