கனடாவில் இந்திய வம்சாவளி தம்பதி கார் விபத்தில் உடல் கருகி பலி!

Report Print Balamanuvelan in கனடா

இந்திய வம்சாவளி தம்பதியினர், கனடாவில் நிகழ்ந்த ஒரு கார் விபத்தில் உடல் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஒன்ராறியோவில் வசித்து வரும், பஞ்சாபில் பிறந்தவர்களான Kulvir Singh Sidhu (53) மற்றும் அவரது மனைவியான Kulwinder Kaur Sidhu (51) இருவரும் தங்கள் காரில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது இந்த விபத்து நிகழ்துள்ளது.

தவறான பாதையில் வேகமாக வந்த கார் ஒன்று Catharines என்ற இடத்தில் தம்பதியரின் காரில் மோதியதில், கார் எதிர்பாராமல் தீப்பற்றியிருக்கிறது.

தீயில் சிக்கிய தம்பதி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

தங்கள் மகளை, அவள் படிக்கும் பல்கலைக்கழகத்தில் விட்டு விட்டு தம்பதியர் வீடு திரும்பும்போது, இந்த கோர விபந்து நிகழ்ந்துள்ளது.

தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்கும் ஆசையில் 2003ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த குடும்பம், பிராம்ப்டனில் வசித்துவந்தது.

தம்பதியரின் பிள்ளைகளான Yuvrajvir (20) மற்றும் Simran(19) இருவரும் பல்கலைக்கழக மாணவர்களாக பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்