கனடாவில் மாயமான 15 வயது சிறுமி! புகைப்படத்துடன் பொலிசார் வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் 15 வயது சிறுமி காணாமல் போன நிலையில் அவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் பொதுமக்கள் உதவியை கோரியுள்ளனர்.

கனடாவின் டொரண்டோ நகரை சேர்ந்த பொலிசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Giselle Chavarriaga என்ற 15 வயது கடந்த 7ஆம் திகதியில் இருந்து காணவில்லை என தெரிவித்துள்ளனர்.

Giselle கடைசியாக Jane தெரு மற்றும் Exbury சாலை பகுதியில் காணப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.

சிறுமி மாயமான போது என்ன உடை அணிந்திருந்தார் என்ற விபரம் தெரியவில்லை.

இதோடு Giselle-ன் உயரம் 5 அடி 3 அங்குலம் எனவும், சாதாரண உடல்வாகுடன் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குறித்து எந்தவொரு தகவல் கிடைத்தாலும் தங்களை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என பொலிசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்