பாலியல் அடிமைகளாக விற்கப்பட்ட இரு இளம்பெண்கள்... அடைக்கலம் அளித்த கனடா: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in கனடா

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்ட இரு இளம்பெண்களின் வாழ்க்கை போராட்டம் தொடர்பில் நெகிழ வைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.

ஈராக்கிய இளம்பெண்களான Dilveen மற்றும் Dalal ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். நீண்ட 5 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை.

Dilveen குடும்பத்தாருடன் தற்போது கனடாவில் குடியிருந்துவரும் நிலையில் அவரது தோழியான Dalal ஈராக்கின் வட பகுதியில் வசித்து வருகிறார்.

இருவருமே இன அழிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு 4 ஆம் திகதி, நுணுக்கமாக திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு யாசிதிகளை கருவறுக்க முடிவு செய்து களமிறங்கியது.

கிராமம் கிராமமாக வேட்டையாடிய அந்த கும்பல் சில நாட்களிலையே சுமார் 10,000 யாசிதிகளை கொன்று குவித்தது.

ஆனால் இளம்பெண்களையும் சிறார்களையும் அந்த பயங்கரவாத கும்பல் விட்டுவைத்தது.

அவர்களின் எதிர்காலம் மரணத்தைவிடவும் கொடூரமாக அமைந்தது. மொத்தமாக 7 ஆயிரம் யாசிதி இளம்பெண்கள் மற்றும் சிறார்களை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பாலியல் அடிமைகளாக விற்பனைக்கு வைத்தது.

Dilveen-கு அப்போது 10 வயது, அவரது தோழி Dalal-கு 13 வயது. சிறார்களை உடல் அமைப்பு மற்றும் முக அழகை காரணமாக வைத்து மூன்று பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்தனர்.

இரண்டாயிரம் முதல் நான்காயிரம் டொலருக்கு ஒவ்வொரு சிறார்களுக்கும் விலை வைத்தனர்.

இந்த நிலையில் இரு தோழிகளும் பிரிந்து செல்லும் சூழல் ஏற்பட்டதும், எங்களை கொன்று விடுங்கள் ஆனால் பிரித்து விடாதீர்கல் என கெஞ்சியும் அதற்கு பலன் கிடைக்கவில்லை என நினைவு கூர்ந்துள்ளார் Dilveen.

இறுதியில் Dalal ஒரு ஐ.எஸ் தீவிரவாதிக்கு விற்கப்பட்டார். Dilveen ஒரு முதியவரால் வாங்கப்பட்டார்.

இதனிடையே சுமார் மூன்று மாதங்களில் அந்த முதியவரிடம் இருந்து தப்பிய Dilveen தமது பெற்றோருடன் கடந்த 2016 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

ஆனால் Dalal தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பாலியல் சித்திரவதைக்கு இரையானார்.

தற்போது நீண்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம் ஈராக் திரும்பியுள்ள Dilveen அதிர்ஷ்டவசமாக தமது தோழி Dalal-ஐ சந்தித்துள்ளார்.

தமது சகோதரிக்கு ஒப்பான இவரை இனி ஒருபோதும் பிரியப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்