இலங்கையிலிருந்து குழந்தையுடன் தனியாக கனடா வந்த பெண்: கிடைத்த நல்ல அனுபவங்கள்!

Report Print Balamanuvelan in கனடா

கணவரைப் பிரிந்து தனியாக குழந்தையுடன் கனடா வந்த ஒரு இலங்கைப் பெண், தனக்கென்று யாரும் இல்லை என வருந்திக்கொண்டிருந்தபோது, அவரது கண்களில் அந்த விளம்பரம் பட்டது.

இலங்கையைச் சேர்ந்த Amalee Danister கனடாவில் தனிமையில் தவித்த போது, பேருந்து ஒன்றில், 1up Single Parent Resource Centre என்ற இடத்தைக் குறித்த விளம்பரம் ஒன்றைக் கண்டார்.

விக்டோரியாவில், புதிதாக கணவரை பிரிந்த தாய்மார்களுக்கான பயிற்சி ஒன்று கொடுக்கப்படுவதை அறிந்த அவர், உடனடியாக தானும் அதில் பங்கேற்க முடிவு செய்தார்.

தனியாக ஒரு குழந்தையுடன் எப்படி வாழ்வது என தெரியாத பெண்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அந்த அமைப்பிற்கு ஏராளமான பெண்கள் வந்திருந்ததாக தெரிவிக்கிறார் Amalee.

தன் குழந்தைக்கு தாய் போல் இருக்கும் ஒருவரையும் தாண்டி, தனக்கு தாய் போல் இருக்க யாராவது இருக்கிறார்களா என்று கேட்க, Lynn McCaughey என்பவர் அவரை சந்தித்திருக்கிறார்.

தன்னைப்போலவே பின்னணி கொண்ட Amaleeயை Lynnக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது.

இரண்டாண்டுகள் அந்த பயிற்சி முடிந்த பின்னரும், இருவரும் நன்றாக ஒட்டிக்கொண்டார்கள்.

இப்போதும், எனக்கு ஒரு பிரச்சினை என்றால், என் தாயை அழைப்பதற்கு பதிலாக Lynnஐத்தான் அழைக்கிறேன் என்கிறார் Amalee.

Lynn மட்டும் இல்லையென்றால், நான் எப்படி இருந்திருப்பேன் என்பது எனக்கே தெரியாது என்கிறார் அவர்.

இதற்கிடையில் கனடாவுக்கு ஒருமுறை பிரித்தானிய இளவரசி கேட் வந்திருந்தபோது, அவர் Amaleeயையும் அவரது மகள் Netushaவையும் சந்தித்திருக்கிறார்.

அவருடன் கை குலுக்கிய Netusha, நீங்கள் ஒரு இளவரசியா என்று கேட்க, ஆம் என்று கூறிய இளவரசியிடம் உங்களுக்கு Frozen படத்தில் எந்த பாத்திரம் மிகவும் பிடிக்கும் என்று கேட்க, அவர் Elsa என்று சொன்னது Netushaவுக்கு மிகவும் பிடித்துப்போனதாம்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்