மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஏர் கனடா விமான நிறுவனம் எடுத்த ஆச்சரிய முடிவு

Report Print Raju Raju in கனடா
185Shares

எல்லா பாலினத்தவர்களும் சரிசமம் என்பதை உணர்த்தும் வகையில் ஏர் கனடா விமான நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கனடா அரசு சில மாதங்களுக்கு முன்னர் தங்கள் நாட்டை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்கள் பாஸ்போர்டில் உள்ள பாலின அடையாளம் என்ற வரியில் ஆண் அல்லது பெண் என்பதற்கு பதிலாக non-binary 'X (மூன்றாம் பாலினத்தவர்கள்) என போட்டு கொள்ளலாம் என தெரிவித்தது.

இந்நிலையில் இது தொடர்பிலான விடயத்தை மேற்கொள்ள ஏர் கனடா விமானம் முடிவு செய்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, விமான அறிவிப்பின் போது எப்போதும் 'ladies and gentlemen’ என ஆண்கள் மற்றும் பெண்களை மற்றும் குறிக்கும் வார்த்தைகள் இனி உபயோகப்படுத்தப்படாது என ஏர் கனடா தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக ’everybody’ (அனைவரும்) என்ற வார்த்தை உபயோகிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், எல்லா பாலினத்தவர்களுக்கும் மரியாதை கொடுக்கும் விதமாகவும், பன்முகத்தன்மையை நிலைநாட்டவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்