கனடா தேர்தல்: தோல்வியைத் தழுவிய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் முதலான முக்கிய பிரமுகர்கள்

Report Print Balamanuvelan in கனடா

கனடா தேர்தல் முடிவுகள் பல முக்கிய பிரமுகர்களுக்கு பெரிய அடியைக் கொடுத்துள்ளன.

கேபினட் அமைச்சர்கள், கன்சர்வேட்டிவ் கட்சியின் துணைத்தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரும் தப்பவில்லை.

ஆட்சியில் இருந்தபோதிலும் ட்ரூடோ பல கேபினட் அமைச்சர்களை தக்க வைக்க தவறிவிட்டார்.

பெரும் அதிர்ச்சிக்குரிய, விதமாக பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் Ralph Goodale மோசமான தோல்வியை சந்தித்துள்ளார்.

flickr

அவர் Saskatchewan சார்பில் 1993 முதல் போட்டியிட்டு வெற்றிபெற்று வந்தவராவார். ஆல்பர்ட்டாவில், இயற்கை வளத்துறை அமைச்சர் Amarjeet Sohiயும் Randy Boissonnaultம் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

அதாவது, இனி ஆல்பர்ட்டா மற்றும் Saskatchewan ஆகிய இரு தொகுதிகளும் ட்ரூடோவின் வசம் இல்லை.

அதே நேரத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியும் பலத்த இழப்பை சந்தித்துள்ளது. கட்சியின் துணைத்தலைவரான Lisa Raitt, முன்னாள் ஒலிம்பிக் வீரர் Adam van Koeverdenஇடம் தோல்வியடைந்துள்ளார்.

RALPH GOODALE

விமர்சகர்களால் இனவாதி என வர்ணிக்கப்பட்ட கனடாவின் populist People’s Party கட்சியின் தலைவரான Maxime Bernier தோல்வியடைந்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Bernier தோல்வியடைந்துள்ளதால், முன்னாள் கன்சர்வேட்டிவ் கட்சியினரான அவர் உருவாக்கிய புதிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் இடம் கிடைக்காது என்பதால், கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

Amarjeet Sohi/ Facebook

RANDY BOISSONNAULT

Citynews

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்