கனடா தேர்தலில் முதல் முறையாக 98 பெண்கள் நாடளுமன்றத்துக்கு தேர்வு... வெளியான முழு தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடா தேர்தல் முடிவுகள் ஏற்கனவே வெளியான நிலையில் 43வது நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 98 பெண் உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

கனடாவில் பொதுத்தேர்தல் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற நிலையில் முடிவுகளும் வெளியானது. அதன்படி மீண்டும் லிபரல் கட்சி அங்கு ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில் மொத்தமுள்ள 338 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 98 பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது.

கனடிய நாடாளுமன்ற வரலாற்றில் இவ்வளவு பெண் உறுப்பினர்கள் ஜெயித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2015 தேர்தலில் 88 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் 2017-ல் நடந்த இடைத்தேர்தலில் மேலும் 4 பெண்கள் வெற்றி பெற்ற நிலையில் பெண் உறுப்பினர்களின் பலம் 92 ஆக உயர்ந்தது.

தற்போது புதிதாக அமையும் 43வது நாடாளுமன்றத்தில் 98 பேர் பெண் உறுப்பினர்கள் தேர்வாகியுள்ள நிலையில் இது சதவீத அடிப்படையில் 29% ஆக உள்ளது.

ஆண் உறுப்பினர்களின் சதவீதம் 71 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்