கனடா தேர்தலில் வென்ற அமைச்சர் ஒருவருக்கு மருத்துவர்கள் அளித்துள்ள சோக செய்தி!

Report Print Balamanuvelan in கனடா
492Shares

கனடா நாடாளுமன்ற உறுப்பினரும், சர்வதேச வர்த்தகம் தொடர்பான துறை அமைச்சராகவும் இருந்த ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு முன் மருத்துவர்கள் அவருக்கு ஒரு மோசமான செய்தியை தெரிவித்துள்ளார்கள்.

வின்னிபெக் நாடாளுமன்ற உறுப்பினரும், international trade and diversification என்ற துறையில் அமைச்சராக பொறுப்பு வகித்தவருமான, Jim Carrக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பதாக தெரியவந்துள்ளது.

நேற்று காலை ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக எனக்கு ப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறிகள் போல காணப்பட்ட நிலையில், எனது மருத்துவர் இரத்தப்பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

பரிசோதனையின் முடிவுகள், எனக்கு multiple myeloma என்னும் இரத்தப் புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளன என்று கூறியுள்ளார் அவர்.

Jim Carrஇன் சிறுநீரகங்களையும் புற்றுநோய் தாக்கியுள்ளதால், அவருக்கு கீமோதெரபியும் டயாலிஸ் சிகிச்சையும் கொடுக்கப்பட்டு வருகின்றன.

தகவலறிந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் சக அமைச்சர்களும் Jim Carrக்கு தங்கள் ஆறுதல் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.

Jim Carr (THE CANADIAN PRESS/Sean Kilpatrick)

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்