கனடாவில் சாலை விபத்தில் வெளிநாடுவாழ் இந்தியர் பலி!

Report Print Balamanuvelan in கனடா

நீண்ட காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வந்த இந்தியர் ஒருவர் தனது பிள்ளைகளுடன் வழ்வதற்காக கனடாவுக்கு குடிபெயர்ந்த நிலையில், சாலை விபத்தொன்றில் பலியாகியுள்ள சம்பவம் துபாய் வாழ் இந்தியர்கள் உட்பட ஏராளமானோரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

துபாயிலுள்ள இந்திய சங்கத்தின் தலைவராக இருந்த Jasjit Singh Jaaj (73) கனடாவில் Missisauga பகுதியில் நடைபயிற்சிக்காக செல்லும்போது விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ஆறு வழிச்சாலை ஒன்றை கடக்கும்போது ஒரு ட்ரக் அவர் மீது மோதியுள்ளது. படுகாயமடைந்த Jaaj உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

துபாயிலுள்ள இந்திய சங்கத்தின் தலைவராக இருந்த Jaaj பெரிய பதவிகளை வகித்து வந்தாலும், இந்தியர்களுக்காக பல்வேறு நற்பணிகள் ஆற்றியதாக அவரை அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் சாலையை கடக்கும்போது, பாதசாரிகள் சாலையை கடப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியை பயன்படுத்தாததாலேயே விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்