கனடாவில் உள்ள சிறையில் திடீரென உயிரிழந்த கைதி! மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட இன்னொரு நபர்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் உள்ள ஒரு சிறையில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்னொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தின் விண்ட்ஸ்சர் நகரில் அமைந்துள்ள South West Detention Centre சிறையில் பல கைதிகள் உள்ளனர்.

இங்கு தங்கியிருந்த இருவர் ஏதோ ஒரு சம்பவத்தில் ஈடுபட்ட போது அதில் ஒருவர் உயிரிழந்தார்.

இன்னொருவர் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.

எந்த சம்பவம் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்தது என்பது குறித்த தகவலை பொலிசார் இன்னும் வெளியிடவில்லை.

விசாரணை நடந்து வரும் சமயத்தில் இது குறித்த மேற்படி தகவலை வெளியிடுவது சரியாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்