இலவசமாக கிடைத்த லொட்டரி சீட்டால் கனடியருக்கு அடித்த அதிர்ஷ்டம்! எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் இலவசமாக கிடைத்த லொட்டரி டிக்கெட்டுக்கு $1 மில்லியன் பரிசு விழுந்த நிலையில் வெற்றியாளர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Saskatchewan மாகாணத்தை சேர்ந்தவர் சின்மோய் தெப் ராய். இவர் இரு வாரங்களுக்கு முன்னர் பெட்ரோல் நிலையத்துக்கு சென்ற போது அங்கு அவருக்கு இரண்டு லொட்டரி டிக்கெட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அதே பெட்ரோல் நிலையத்துக்கு சென்ற ராய் அந்த டிக்கெட்களை ஊழியர்களிடம் கொடுத்து பரிசு விழுந்ததா என பார்க்க சொன்னார்.

அப்போது ஒரு டிக்கெட்டுக்கு $10 பரிசு விழுந்ததாக கூறிய ஊழியர், இரண்டாவது டிக்கெட்டை பரிசோதனை செய்துவிட்டு சில நிமிடம் மெளனமானார்.

பின்னர் இந்த டிக்கெட்டுக்கான பரிசு பணத்தை என்னால் கொடுக்க முடியாது என கூறிய அவர் அதற்கு மிக பெரிய தொகையான $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது எனவும், இந்த பரிசு பணத்தை லொட்டரி நிறுவனத்திடம் சென்று தான் நீங்கள் வாங்க வேண்டும் எனவும் ராயிடம் கூறினார்.

இதையடுத்து ராய் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளார்.

அவர் கூறுகையில், பரிசு பணத்தை சில கட்டணங்களை செலுத்த செலவிடுவேன், என் குழந்தைகளின் கல்விக்கும் பணத்தை சேமித்து வைப்பேன்.

இவ்வளவு பெரிய பரிசு கிடைத்தாலும் என் வேலையை ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்